வெளிநாட்டு வேலை மோசடி - நெல்லையில் ஒருவர் கைது
நெல்லை: வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.ஒரு லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்.
இவரிடம் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள நாகர்கோடு கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபு. சைன், டார்வின் ஆகியோர் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ரூ.40 ஆயிரம் கொடுத்தனர்.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் கொடுத்தனர். இவர்களை நீண்ட நாட்கள் வெளிநாட்டுக்கு அனுப்பவி்ல்லை.
இதனால் குலசேகரத்தை சேர்ந்த ஜெயபிரபு, சைன், டார்வின் ஆகிய 3 பேரும் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஜாபரிடம் தகராறு செய்தனர்.
அப்போது ஜாபர் அவர்களிடம் மலேசியாவில் துப்பரவு பணியாளர் வேலை உள்ளது போகிறீர்களா என்று கேட்டுள்ளார்.
இதனால் தாங்கள் கொடுத்த ரூ.40 ஆயிரத்தையும் பாஸ்போர்ட்டையும் திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் ஜாபர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஜெயபிரபு நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ஜாபரை கைது செய்தனர். இவர் இது போல் ஏராளமானோரிடம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications