கிங்பிஷர் விமானத்தில் குண்டு வைத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவர் தற்கொலை
திருவனந்தபுரம்: கிங்பிஷர் விமானத்தில் குண்டு வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த கிங்பிஷர் நிறுவன முன்னாள் காண்டிராக்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 21ம் தேதி பெங்களூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த கிங்பிஷர் விமானத்தின் சரக்குப் பகுதியில், வெடிகுண்டு இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், கிங்பிஷர் நிறுவன ஊழியர் ராஜசேகரன் நாயர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிங்பிஷர் நிறுவனத்தின் முன்னாள் காண்டிராக்டரான சுனில் லாரன்ஸ் (25) போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் அருகே உள்ள வலியதாரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு சுனில் லாரன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருந்தார். அதில், என்னைப் போன்ற அப்பாவி மக்களை போலீஸார் விசாரிக்கும் விதம் என்னை வேதனை அடைய வைத்தது. அதுவே இந்த முடிவுக்கு என்னைக் கொண்டு சென்றது. போலீஸார் தங்களது விசாரணையில் வெற்றி பெற வாழ்த்துகள் என்று எழுதி வைத்திருந்தார் சுனில்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications