இலங்கை தேர்தல்: ராஜபக்சே கூட்டணிக்கு வெற்றி - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 12 எம்.பிக்கள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முக்கால்வாசி வெளியாகி விட்டது. இதுவரை 186 தொகுதிகளின் (மொத்தம் 225) முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் ராஜபக்சே கூட்டணிக்கு 127 இடங்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கூட்டணிக்கு 51 இடங்கள் கிடைத்துள்ளன. 3வது இடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. அந்தக் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த 12 இடங்களுமே தமிழர் பூமியான வட கிழக்கிலிருந்து கிடைத்தவையாகும்.
பொன்சேகா கூட்டணிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. இந்தக் கூட்டணி உள்ளிட்ட மற்றவர்கள் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளனர்.
ரணில் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய தோல்வியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் பிரதிநிதி
தமிழர் பகுதிகளான வட கிழக்கில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பே முதலிடம் பிடித்துள்ளது. மற்ற தமிழ்க் கட்சிகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன. ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈராஸ், புளாட் உள்ளிட்டவை ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. மக்கள் இந்தக் கட்சிகளை முழுமையாக நிராகரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். இங்கு ராஜபக்சே கூட்டணிக்கு 3 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலா 3 சீட்கள் கிடைத்துள்ளன. வன்னியில் ராஜபக்சே கூட்டணிக்கு 2 இடங்களும், ரணில் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. மட்டக்களப்பில் ராஜபக்சே, ரணில் கூட்டணிகளுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
திகடுமல்ல மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
சம்பந்தன் மகிழ்ச்சி
தேர்தல் முடிவுகள் குறித்து சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்கு சீட்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இதனால் மகிழ்ச்சி இல்லை என்று கூற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை மட்டுமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மற்றவர்களை அவர்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதன் கொள்கைகளையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள். எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையே இந்த முடிவு காட்டுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications