புதிய தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் - டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய சட்டசபை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் சூப்பர்வைசர், விற்பனையாளர், 'பார்' உதவியாளர்கள் உள்ளிட்ட 33 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக ஊழியர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இவர்களுக்கு காந்தி ஜெயந்தி, மிலாடி நபி, மகாவீர் ஜெயந்தி உட்பட வருடத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை. வார விடுப்பு, தற்செயல் விடுப்பு அரசு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக்கில் பணியாற்றும் பணியாளர்களை அரசு கருணை காட்டி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் புதிதாக அமைந்துள்ள தலைமைச் செயலகம் முன்பு மே மாதம் போராட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யூ.சி - சியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு பிரிவினர் மார்ச் 17 ம் தேதி வேலை நிறுத்தம் செய்த போது, அதில் 81 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications