குரூப் 2 வினாத்தாள் லீக் ஆனதாக பரபரப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் மறுப்பு

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மறுத்துள்ளார்.
நாளை தமிழகத்தில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. இதை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்த நிலையில் தஞ்சைக்கு வந்த வினாத்தாள் கட்டுக்களில் ஒன்று காணாமல் போய் விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் கூறுகையில்,
நாளை நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகளில், 79 கட்டுகள் தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கு 42 கட்டுகளும், பட்டுக்கோட்டைக்கு 22 கட்டுகளும் தரப்பட்டுள்ளன.
இந்த கட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக பெறப்பட்டு அந்ததந்த தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதை இன்று காலை சரிபார்த்து, அனைத்தும் சரியாக உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்திற்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற செய்தி வெறும் வதந்தி என்றும் திட்டமிட்டபடி நாளை குரூப் 2 தேர்வு நடைபெறும் என்றார்.
இதேபோல வினாத்தாள் வெளியானதாக வெளியான தகவல் தவறு என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்துவும் மறுத்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications