அவுரங்காபாத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்- பள்ளிக்கூடத்தைத் தகர்த்தனர்
Subscribe to Oneindia Tamil
அவுரங்காபாத்: பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில், ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் யாதுபூர் கிராமத்தில், அரசால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு மாவோயிஸட் நக்சலைட்டுகள், கிட்டத்தட்ட 50 பேர் திடீரென வந்து முற்றுகையிட்டனர். பின்னர் டைனமைட்டுகளை வீசி பள்ளிக்கூடத்தைத் தகர்த்தனர்.
இதில் அந்தப் பள்ளிக் கட்டடம் தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications