மலேசியாவில் கணவன் உயிருக்கு ஆபத்து: திருவள்ளூர் பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: ஏஜென்ட் மூலம் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவன் அங்கு தனியறையில் வைத்து சித்ரவதை செய்யப்படுகிறார் என்று மனைவி புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அடுத்து திருவள்ளூரில் மணவாளன் நகரைச் சேர்ந்தவர் மணி. 30 வயதான இவர் தையல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

மணவாளன் நகரில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்ட் ஒருவரின் மூலம் மணி கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவுக்கு இவர் சென்றுள்ளார்.

இதற்காக ஏஜென்ட்டிடம் ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளார். மலேசியாவில் 'டெய்லர்' வேலை ஏற்பாடு செய்துள்ளதாக ஏஜென்ட் கூறியுள்ளார்.

ஆனால் மலேசியாவில் இருந்து திருவள்ளூரில் உள்ள தனது மனைவி லாவன்யாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மணி, தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றும் தனியறையில் வைத்து தான் துன்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லாவன்யா, திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்ட் வனிதாவிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார்.

மணியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் லாவன்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+