சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் அடித்து நொறுக்கப்பட்டன
கோல்கத்தா: விபத்தில் அடிபட்ட நோயாளிகளை முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்த மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது.
தெற்கு கோல்கத்தா நகரில் பியர்லெஸ் மருத்துவமனை அருகே இன்று விபத்து ஏற்பட்டது.
மூன்று பேரை பலிகொண்ட இந்த விபத்தில் கடுமையாக காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களை பியர்லெஸ் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் முயன்றனர்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகிகள் காயமடைந்தவர்களை சேர்க்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இதே மருத்துவமனையின் மற்றொரு பிரிவில் கொண்டு போய் சேர்க்க முயன்றனர். அங்கும் மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கும்பலாக சேர்ந்து இரண்டு மருத்துவமனைகளையும் அடித்து நொறுக்கினர்.
மருத்துவமனைகளில் இருந்த வாகனங்கள், மரச்சாமான்கள், மேஜை இருக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
மருத்துவமனையின் உள்ளே இருந்த கேன்டீனையும் கும்பலைச் சேர்ந்தவர்கள் துவம்சம் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications