அமைச்சர்-ஓபி வாக்குவாதம்: தரையில் அமர்ந்த எம்எல்ஏ
சென்னை: கரும்பு விலை தொடர்பாக எழுந்த விவாதத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், எதிர்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வதுக்கும் இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது.
தமிழக சட்டசபையில் இன்று விவசாய மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்தார்.
அப்போது கரும்பு விலை குறித்து பேசிய அமைச்சர், 'கரும்புக்கு மத்திய அரசு என்ன விலை நிர்ணயித்ததோ அதே விலை தான் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
அதற்கும் மேலாக மாநில அரசு கூடுதல் விலை எதையும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு 9.5 சதவீத பிழித்திறன் கொண்ட கரும்புக்கு விலை டன்னுக்கு ரூ.1014 என அறிவிக்கப்பட்டது.
அதுவும் திமுக ஆட்சி வந்த பிறகு தான் வழங்கப்பட்டது' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், 'அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கிறார். ஒரு நாள் ஒரேயொரு தகவலை தவறாக கூறியதற்காக எங்கள் கட்சி அதிமுக உறுப்பினர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால் அமைச்சர் இப்படி தினமும் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். இதற்கு என்ன தீர்ப்பு?
அதிமுக ஆட்சியில் தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1000க்கும் மேல் கரும்புக்கு விலை வழங்கப்பட்டது' என்று சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 'உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த தகவல்களையும் சபாநாயகரிடம் தரட்டும். நான் அளித்த தகவல்களையும் சபாநாயகரிடம் தருகிறேன்.
இவற்றை ஆராய்ந்து எது தவறான தகவல் என்று சபாநாயகர் தீர்ப்பு சொல்லட்டும். நான் சொன்னது தவறான தகவல் என்றால் சபாநாயகர் கூறும் தீர்ப்புக்கு கட்டுப்படுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் கூறியது தவறான தகவல் என்றால் அவரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வீர்களா' என்றார்.
தரையில் உட்கார்ந்த அதிமுக எம்.எல்.ஏ:
இந் நிலையில் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. சபாநாயகர் முன்பு தரையில் உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான பாண்டுரங்கன் குறுக்கிட்டுப் பேச அனுமதி கேட்டார்.
அமைச்சர் பேசிய பிறகு வாய்ப்பு அளிப்பதாக சபாநாயகர் கூறினார். ஆனால், அமைச்சர் பேசி முடித்த பிறகும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டுரங்கன் சபாநயாகர் முன்பு வந்து தரையில் உட்கார்ந்தார்.
நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் எச்சரித்ததையடுத்து எழுந்து சென்றார். அவரை ஓ.பன்னீர் செல்வமும் சமாதானப்படுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications