டெல்லி சென்ற ரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்லீப்பர் கோச்சின் கழிவறையில் கிடந்த பார்சலில் சிவப்பு நிறத்தில் சிறிய வெளிச்சம் மினுக் மினுக்கென்று வெளியானதை கண்டதும் பயணிகள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் மெஹோபா நகரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு டெல்லி, நிஜாமுதீனை நோக்கி சென்று கொண்டிருந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு நேரத்தில் இந்த பதட்டம் உருவானது.
தகவல் அறிந்த பின் பல மணி நேரம் கழித்து அலகாபாத்தில் இருந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் வந்தனர்.
வெடிகுண்டு இருந்த பெட்டி மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. இதன் பின் நிபுணர்கள், கழிவறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட முயற்சிக்கு பின்னர், தனியிடத்தில் வைக்கப்பட்டு லேசான வெடிச்சத்தத்துடன் அந்த குண்டு செயலிழக்கப்பட்டுவிட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வெடிகுண்டு எத்தகையது, யார் இதை வைத்தது, பின்னணி என்ன என்பது பற்றிய தகவல்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications