நக்ஸல் விவகாரம்-ப.சிதம்பரம் மீது மூத்த காங். தலைவர் கடும் தாக்கு

அதிபுத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு இந்த விவகாரத்தை சட்டம்-ஒழுங்கு பிரச்சனை போல சிதம்பரம் கையாண்டு வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தண்டேவாடாவில் 72 மத்தியப் படை வீரர்களை நக்ஸலைட்டுகள் கொடூரமாகக் கொலை செய்துள்ள நிலையில் சிதம்பரத்தின் மீது இந்தத் தாக்குதலாத் தொடுத்துள்ளார் சிங்.
ராகுல் காந்தியின் ஆலோசகராக விளங்கும் திக்விஜய் சிங், சோனியா குடும்பத்தின் முழு ஆதரவைப் பெற்ற மூத்த தலைவராவார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான இவர் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வராவார். இவர் ஒரு பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில் சிதம்பரத்தை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
ப.சிதம்பரம் சிறந்த அறிவாளி, மிகவும் நேர்மையானவர் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால், நக்ஸல் விவகாரத்தை சிதம்பரம் மிகவும் கடுமையாகவும், அதிபுத்திசாலித்தனத்தால் வந்த திமிரான போக்குடனும் கையாண்டு வருவது சரியல்ல.
இந்த விவகாரம் சமூக-பொருளாதார பிரச்சனைகளை உள்ளடக்கியது என்பதை அவர் உணர வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் மிகவும் குறுகிய மனதோடு மாவோயிஸ்ட் பிரச்சனையை அணுகுவது சரியல்ல என்று கூறியுள்ளார் தி்க்விஜய்.
சோனியா-ராகுலின் ஆதரவு இல்லாமல் சிதம்பரத்தை திக்விஜய் வெளிப்படையாக பத்திரிக்கை மூலம் தாக்க முடியாது என்பது நிச்சயம்.
இதன்மூலம் நக்ஸல் விவகாரத்தை சிதம்பரம் கையாண்டு வரும் முறையை சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், இந்த சம்பவத்துக்காக சிதம்பரம் ராஜினாமா செய்ய முன் வந்தபோது அதை பிரதமர் ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசுக்குள் பிளவு:
திக்விஜய் சிங்கின் கட்டுரை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அருண் ஜேட்லி, நகஸ்ல்கள் விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்ற பிரச்சனையில் மத்திய அரசுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தை ஆயுதங்களால் தான் அடக்க முடியும் என்பதே என் கருத்து என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications