6வது முறையும் தமிழக முதல்வராவார் கருணாநிதி -திருமாவளவன்
சென்னை : ஆறாவது முறையும் முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
மறைமலைநகர் விருது விழாவுக்குத் தலைமை தாங்கி அவர் பேசுகையில்,
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக முதல்வர் கருணாநிதி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். அருந்ததியின மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்காகத்தான் அவருக்கு அம்பேத்கார் சுடர் விருதை வழங்கியுள்ளோம். இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன்.
தேவேந்திர குலத்தை சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்துக்கு நினைவு மண்டபமும், அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபமும் கட்டவேண்டும். இம்மானுவேல் சேகர் பெயரில் தபால் தலை வெளியிட வேண்டும். காயிதே மில்லத் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
புதிய சட்டப்பேரவை வளாகத்தில் அம்பேத்காருக்கும், பெரியாருக்கும் சிலை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் முதல்வர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்போம் என்றார் அவர்.
விழாவில் விருது பெற்ற தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில்,
சமுதாய விடுதலைக்கான போராட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது போன்ற புரட்சிகரமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். ஆனால் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சிக்கு வருவார்.
இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே, முதல்வர் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் இந்த ஆட்சிக்கு கவசமாக உள்ளோம். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் கவிழ்த்துவிட முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications