சானியாவின் திருமணத்தால் அதிருப்தி – மகளுக்கு வைத்த சானியா என்ற பெயரை மாற்றிய தம்பதி
போபால்: சானியா மிர்ஸா மீது கொண்ட அன்பால் தங்களது மகளுக்கு சானியா என பெயர் வைத்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்துத் தம்பதி, சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டதால் அதிருப்தி அடைந்து மகளுக்கு வைத்த பெயரை மாற்றி விட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த இந்து தம்பதி கீதா-மதன்லால். இவர்களுக்கு கடந்த 2002-ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த கால கட்டத்தில் சானியா புகழின் உச்சத்தில் இருந்தார்.
இதையடுத்து தனது மகளுக்கு சானியா என பெயர் வைத்தார் மதன் லால். தற்போது 7 வயதாகும் சானியா, 3ம் வகுப்பு படிக்கிறார்.
சமீபத்தில் சானியாவுக்க்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் திருமணம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் மதன்லால். பாகிஸ்தான் வீரரைப் போய் சானியா மணந்துள்ளாரே என்ற அதிருப்தியில், தனது மகளுக்கு வைத்த பெயரை தற்போது சங்கீதா என மாற்றி விட்டார்.
இதுகுறித்து மதன்லால் தம்பதி கூறுகையில், சானியா ஒரு இந்திய வீரரை மணந்திருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நமது எதிரி நாட்டு வீரரைப் போய் அவர் மணந்ததால் வேதனை அடைந்தோம்.
நாட்டுப் பற்றுக்காகத்தான் சானியா என்ற பெயர் முஸ்லீம் பெயராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் எங்களது மகளுக்கு வைத்தோம். ஆனால் அந்த நாட்டுப் பற்று சானியாவிடம் இல்லாமல் போய் விட்டது. அவருக்கு கொடுத்த அனைத்து சலுகைகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார் மதன்லால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications