முஷாரப் நினைத்திருந்தால் பெனாசிரை காப்பாற்றியிருக்க முடியும் - ஆனால் செய்யத் தவறி விட்டார்: ஐ.நா

சிலி நாட்டுத் தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையிலான 3 பேர் கொண்ட ஐ.நா. குழு பெனாசிர் பூட்டோ மரணம் குறித்து விசாரித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது.
அதில் முஷாரப் நினைத்திருந்தால் இந்தப் படுகொலையைத் தடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு பெனாசிர் பூட்டோவை காக்கத் தவறியது முஷாரப் அரசு. அதேபோல அவரது மரணத்திற்குப் பின்னரும், அதுகுறித்து முறையாக விசாரிக்கவும் அது தவறி விட்டது.
பெனாசிருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் இருந்தன. அதுகுறித்து அரசுக்கும் தெரியும். ஆனாலும், அவரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முஷாரப் அரசு எடுக்கவில்லை.
பெனாசிரின் பாதுகாப்பு குறித்து முஷாரப் அரசில் இருந்த அதிகாரிகள் கவலைப்படவே இல்லை. கொலைக்குப் பின்னரும் கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அக்கறை காட்டவே இல்லை.
பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பஞ்சாப் மாகாண அரசும், ராவல்பிண்டி மாவட்ட போலீஸாரும்தான் அன்றைய தினம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மிகப் பெரிய அளவிலான கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் பெனாசிரின் பாதுகாப்பை பலப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2009ம் ஆண்டு இதுகுறித்து விசாரிக்க ஐ.நா. சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தரப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இக்குழுவுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்த்து.
.தற்போது விசாரணையை முடித்து விட்ட குழு தனது அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் வழங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications