ஐபிஎல் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீர் மாற்றம்- ஹர்ஷத் மேத்தா புதிய தலைவர்
டெல்லி: பெரும் சர்ச்சைப் புயலில் சிக்கியுள்ள ஐபிஎல் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஐபிஎல்லில் புதிதாக இணைந்த அணி கொச்சி. ஆனால் இந்த அணியை மையமாக வைத்து தற்போது பெரும் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் கொச்சி அணியை வாங்கியுள்ளது. தற்போது புதிய நிர்வாகிகளை அது அறிவித்துள்ளது.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷத் மேத்தா என்பவர் கொச்சி அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல புதிய தலைமை செயலதிகாரியாக கேசவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் இப்பதவியில் இருந்தவர் சைலேந்திர கெய்க்வாட்.
ஹர்ஷத் மேத்தா, துபாயில் ரோசி ப்ளூ டயமண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் இவருக்கு பங்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதல் தனது குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருகிறார் மேத்தா. ஜெபல் அலி பகுதியில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது.
கொச்சி அணியின் நிர்வாகம், அதன் பங்குதாரர்கள் குறித்து பெரும் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், புதிய நிர்வாகிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications