எஸ்.ஐ. வெற்றிவேல் படுகொலை – கைதான எஸ்.ஐ. சிவசுப்ரமணியனின் மனைவிக்கு ஜாமீன்
திருநெல்வேலி: ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் படுகொலை வழக்கில் கைதான கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியனின் மனைவி சிவகாமிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
கடையம் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், தனது மனைவி சிவகாமியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் சிவகாமியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் என்று தவறுதலாக ஆள் மாறாட்டத்தில் ஆழ்வார் குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை கொலை செய்தனர்.
இது தொடர்பாக சிவகாமி, அவரது 4 சகோதரர்கள், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை இன்னும் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என்று கீழ்கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வேண்டியது இருப்பதாலும், விசாரணைக்கு பாதகம் ஏற்படும் என்று கருதுவதாலும் ஜாமீனில் விடக்கூடாது என்று அரசு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி சுந்தரேஷ் விசாரணை நடத்தி சண்முகசுந்தரம், கள்ளபிரான், முருகேசன் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இருப்பினும், சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமியின் ஜாமீன் மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
சிவகாமி தினமும் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சிவகாமி இன்று சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications