பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே 2 குண்டுகள் வெடிப்பு-8 பேர் காயம்

கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார்.
குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. அங்கு கிடக்கும் சிதறல்களை வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்து சோதனையை தொடங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது ஸ்டேடியத்திற்குள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இருந்தனர். குண்டுவெடிப்புக்குப் பின்னரும் அனைவரும் ஸ்டேடியத்திற்குள்ளேயே அமர வைக்கப்பட்டனர்.
குண்டுகள் வெடித்தவுடன் இரு அணிகளின் வீரர்களும், டிரஸ்ஸிங் ரூமிலேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு ஸ்டேடியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர சோதனை நடந்தது.
முன்னதாக டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும், ஜெனரேட்டர் அதிக சூடாகி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. பின்னரே இவை குண்டு வெடிப்புகள் என்று தெரியவந்தது.
இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்குவதாக இருந்தது. இருப்பினும் குண்டுவெடிப்பு காரணமாக ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு ஐந்து மணிக்குத் தொடங்குகிறது.
பெங்களூர் அணி டாஸ் வென்றுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications