தரம்சாலாவில் பிசிசிஐ கூட்டம்- லலித் மோடிக்கு அழைப்பில்லை
டெல்லி: பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராகக் கருதப்பட்ட லலித் மோடிக்கு முதல் முறையாக பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் தொடர்பாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டியுள்ள உயர் நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள லலித் மோடிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
கொச்சி ஐபிஎல் அணியை ஏலம் எடுத்தது தொடர்பாக மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் - ஐபிஎல் அமைப்பாளர் லலித் மோடி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது அரசியல் சர்ச்சையாக மாறியதுடன், ஐபிஎல் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் அளவுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அமைப்பு தனியார் நிறுவனம்தான் என்றாலும், அரசு அமைப்புக்கு உரிய கவுரம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது முதல்முறையாக ஒரு தனியார் அலுவலகத்தில் அரசு ஏஜென்ஸிகள் மேற்கொள்ளும் அனைத்து சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
மேலும் ஐபிஎல் விவகாரத்தால், பிசிசிஐக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்ந்த அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தொடர்பான அனைத்து வருமானங்களும் இனி வரி செலுத்தும் இனமாக பார்க்கப்பட வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக கிரிக்கெட் வாரியத்தின் உயர்நிலைத் தலைவர்கள் தர்மசாலாவில் கூடினர்.
இந்தக் கூட்டத்துக்கு லலித் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஐபிஎல் அமைப்பில் லலித் மோடியின் அதிகாரத்தைக் குறைக்கும் பிசிசிஐ நடவடிக்கையின் முதல்படியாக இது பார்க்கப்படுகிறது.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications