இடி, மின்னலுடன் மழை - 100 இலவச டிவிக்கள் எரிந்து நாசம்
சுரண்டை: சுரண்டை பகுதியி்ல் திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் 100 இலவச டிவிக்கள் எரிந்து நாசமாயின.
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சுந்தரபாண்டியபுரம், கட்டான்குளம், திருசிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென இடி, மின்னல் இடித்தது. இதில் அப்பகுதியில் உள்ள சூடாமணி, கணபதி, மாரி, நயினார், துரைராஜ், பேச்சிமுத்து உள்பட 100க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவிக்கள் வெடித்தன. மேலும் மின்விசிறி, அயர்ன் பாக்ஸ், போன்ற பொருட்களும் சேதமடைந்தன. இதில் தாட்டங்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் மயங்கி விழுந்தார்.
வெடித்துச் சிதறிய டிவிகள் அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட டிவிகள் ஆகும். மேலும் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான தென்னைமரங்கள் எரிந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த இந்து துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து ஓடினர்.
சம்பவம் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர், கவுன்சிலர்கள் வெள்ளியப்பன், முப்புடாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு புதிய டிவி கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் கூறி சென்றனர். நேற்று மாலையும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications