ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகளை மாற்ற வேண்டாம்- எதியூரப்பா

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெறுவதாக இருந்த அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றி விட்டது ஐபிஎல் நிர்வாகம்.
இதனால் கர்நாடக அரசு அதிருப்தி அடைந்துள்ளது. பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி ஐபிஎல் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இந்த நிலையில், போட்டிகளை மாற்றக் கூடாது என்று முதல்வர் எதியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். எனவே அரை இறுதிப் போட்டிகளை பெங்களூரிலிருந்து மாற்றக் கூடாது என்று கோரியுள்ளார்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெங்களூரில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த்து குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் கமிஷனர் பாய்ச்சல்
இதற்கிடையே, ஐபிஎல் முடிவுக்கு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த முடிவு நியாயமற்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை திரும்ப்ப் பெறாவிட்டால் அது மிகப் பெரிய தவறாக அமைந்து விடும். அரை இறுதிப் போட்டிகளுக்குப் பாதுகாப்பு தர இயலாது என்று நாங்கள் கூறியதாக ஐபிஎல் கூறியிருப்பது தவறானது, அடிப்படை இல்லாதது. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு கூறியதில்லை.
அரை இறுதிப் போட்டிகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு தருகிறோம் என்றுதான் நாங்கள் கூறியிருந்தோம். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் ராஜீவ் சுக்லா கூறியிருப்பது தவறானதாகும் என்றார் பித்ரி.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications