மக்கள் நல திட்டத்தில் ஊழல் செய்த மதுரை பெண் தாசில்தார் சஸ்பெண்ட் !
மதுரை: மதுரையில் மக்கள் நல திட்டத்தில் ஊழல் செய்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை வடக்கு தாலுகாவில் நலிந்தோர் உதவி திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ஆனந்தி. இவர் முன்பு, உசிலம்பட்டியில் துணைத் தாசில்தாராக இருந்தார். பின்பு பதவி உயர்வு பெற்று தாசில்தாராக பணியாற்றி வருகின்றார்.
ஓராண்டுக்கு முன், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, பின் விடுவிக்கப்பட்டவர்.
நலிந்தோர் உதவி திட்டத்தின் மூலம் விதவைகள், ஆதரவற்றோர், முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர் என பலருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகின்றது.
மேலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களில், குடும்பத் தலைவர் இறந்தால் பத்து ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அரது வழங்கி வருகின்றது.
இந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவபவர்களுக்கு செக் -காகவே வழங்க வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், மதுரை பெண் தாசில்தார் ஆனந்தி, செக் -க்கு பதிலாக பணமாக வழங்கியுள்ளார்.
மேலும், பயனாளிகளுக்கான 'செக்'கை தனக்கு வேண்டியவர்கள் பெயரில் வரவு வைத்து, முழுத்தொகையையும் வழங்காமல், சிலஆயிரங்களை மட்டும் வழங்கி மீதத்தை முறைகேடு செய்துள்ளார். இது போன்று பலரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்படவர்கள் பெண் தாசில்தார் ஆனந்தி மீது தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெருத்தெருவாய் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். மேலும் தமிழக அரசுக்கும் புகார் மனு அனுப்பினர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பெண் தாசில்தார் ஆனந்தி மீது விசாரணை நடத்த மாவட்ட வழங்கல் அலுவலர் முருகய்யாவுக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் தாசில்தார் ஆனந்தி பணம் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெண் தாசில்தார் ஆனந்தி கடந்த ஏப்ரல் 17 ம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications