சென்னையில் நமல் ராஜபக்சே - கொதித்தெழுந்த தொண்டர்கள் கைது

தமிழ் இனப்படுகொலை செய்தவர் என சர்வதேச சமூகத்தால் விமர்சிக்கப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நேற்று இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார்.
அதுவும், பொழுதுபோக்கு காரணத்துக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிப்பதற்காக இந்தியாவுக்கு நமல் ராஜபக்சே வந்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த போது, மனிதாபிமான உணர்வு சிறிதும் இல்லாமல் அவரை திருப்பி அனுப்பினர் அதிகாரிகள்.
இவ்விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை போலீஸ் அதிகாரிகள் ராஜமரியாதையோடு வந்து செல்வதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் நேற்று சென்னை விமான நிலையம் முன்பு குவிந்துவிட்டனர்.
பெரியார் திராவிடக் கழக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்னை விமான நிலைய வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயால் பாதிக்கப்பட்ட 80 வயது பார்வதி அம்மாளை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி விட்டு கிரிக்கெட் போட்டி பார்க்க வந்த நமல் ராஜபக்சேவை ராஜமரியாதையுடன் அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், போலீசாருடன் சென்று 13 பேரை கைது செய்தார்.
இதற்கிடையே, நேற்று டெல்லி போய் சேர்ந்துவிட்டதாகவும், அங்கிருந்து, சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications