குஜராத் கலவரம் – மோடியைத் தொடர்ந்து பிரவீன் டொகாடியாவுக்கு எஸ்ஐடி சம்மன்

2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகவன் இதன் தலைவராக இருக்கிறார்.
இந்தக் குழு கடந்த மார்ச் 27ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 2 கட்டமாக கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
தற்போது விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் டொகாடியாவையும் விசாரிக்கவுள்ளது எஸ்ஐடி. இன்று விசாரணைக்கு வருமாறு டொகாடியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்.ஐடி தரப்பில் கூறுகையில், 2002ல் நடந்த மதக் கலவரத்தில், அரசின் செயல்பாடுகள் குறித்து டொகாடியாவிடம் விசாரித்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது. டொகாடியாவின் வாக்குமூலம் முக்கியமானது. காரணம், நரேந்திர மோடிக்கும், டொகாடியாவுக்கும் இப்போது சரிவரப் பேச்சுவார்த்தை இல்லை. எனவே மோடி அரசின் தவறுகள் குறித்து தனக்குத் தெரிந்த்தை டொகாடியா தெரிவிக்கலாம் என நம்புகிறோம் என்றனர்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, முன்னாள் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா, முன்னாள் பாஜக தலைவர் நளின் பட் ஆகியோரை எஸ்ஐடி விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. இவர்கள் மூன்று பேருமே பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications