எரிமலை..மெல்ல மெல்ல சீராகிறது விமானப் போக்குவரத்து

வானில் பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஐரோப்பிய நாடுகளின் மீது பரவிய இந்த சாம்பல் புகையால் கடந்த 6 நாட்களாக அமெரிக்கா, ஐரோப்பா விமானங்கள மட்டுமின்றி இந்த நாடுகளுக்குச் செல்லும் பிற நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
சுமார் 8,000 விமானங்கள் நிறுத்தப்பட்டு நாளொன்றுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. லட்சக்கணக்கான பயணிகள் உலகின் பல விமான நிலையங்களிலும் தவித்து வருகின்றனர்.
இந் நிலையில் சாம்பல் புகை சற்று கலைந்ததையடுத்து சில விமானங்களை செலுத்தி சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சில நாடுகள் விமானங்கள் செல்லலாம் என்றும், சில நாடுகள் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இதையடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சில நிறுவனங்கள் தங்கள் சேவையை மீண்டும் துவக்கியுள்ளன. இன்று 30 சதவீதம் அளவுக்கு விமான போக்குவரத்து சீராகிவிட்டதாகத் தெரிகிறது.
ருமேனியா, சுவீடன், குரேசியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முழுமையாக விமான போக்குவரத்து தொடங்கிவிட்டது. ஆனால் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் விமான போக்குவரத்து தொடங்கவில்லை.
ஜெர்மனியில் பகல் நேரத்தில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இரவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.
நியூயார்க்கிலிருந்து பாரிசுக்கு நேற்று நள்ளிரவு விமானம் இயக்கப்பட்டது. கடந்த 6 நாட்களில் ஐரோப்பியாவுக்கு பயணமாகும் முதல் அமெரிக்க விமானம் இது.
இதற்கிடையே ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்துவிட்டு கெய்ரோ, வழியாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.
விமானங்கள் சுற்றி செல்வதால் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தவிக்கும் பயணிகளுக்கு உதவ விமான போக்குவரத்து இணை செயலாளர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலின்போது ஏற்பட்ட பாதிப்பை விட எரிமலையால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் வெடித்து சாம்பல் தூசியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், இம்முறை குறைந்த அளவே சாம்பல் மண்டலம் உருவாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications