லலித் மோடியை குற்றவாளி போல நடத்துவது தவறு – ஷில்பா, பிரீத்தி ஜிந்தா ஆவேசம்

இந்த இரு அணிகளிலும் பினாமி மூலம் பங்கு வைத்துள்ளார் மோடி என்று ஒரு குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை கைவிட்டு விட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் உரிமையாளர்களை தூண்டி விட்டு தனக்கு ஆதரவாக திரள வைக்கிறார் மோடி என்று தெரிகிறது. அதிலும் தான் மறைமுகமாக பங்கு வைத்திருப்பதாக கூறப்படும் அணிகளின் உரிமையாளர்கள்தான் மோடியை தீவிரமாக ஆதரித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.
முதலில் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா ஆதரித்துப் பேசினார். பின்னர் புதிதாக சேர்ந்துள்ள புனே அணியை வாங்கியுள்ள சுப்ரதோ ராய் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.
தற்போது ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவும் மோடியை தீவிரமாக ஆதரித்துப் பேசியுள்ளனர்.
இதுகுறித்து ஷில்பா கூறுகையில், ஐபிஎல்லின் முக்கிய அங்கம் மோடி. அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. ஐபிஎல்லின் மூளையே மோடிதான். இது அவருடைய குழந்தை. மோடியால்தான் ஐபிஎல் இந்த அளவுக்கு வளர முடிந்தது.
ஐபிஎல்லின் பின்னணியில் நடந்த தவறுகள் குறித்து எனக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் உள்ளன. அதில் தவறு செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் நிரூபிக்ப்படும் வரை அவர்களை குற்றம சாட்ட முடியாது. குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஒருவரை எப்படி குற்றவாளி என்று கூற முடியும்.
உலகளவில் மிகப் பெரிய வெற்றியாக ஐபிஎல்லை மாற்றியவர் மோடி என்பதை மறந்து விடக் கூடாது. அந்த பாராட்டை அவருக்கு நாம் கொடுத்தே ஆக வேண்டும். மோடியின் முயற்சிகளால்தான் இன்று ஐபிஎல் இந்த அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றார் ஷில்பா.
இத்போல பிரீத்தி ஜிந்தா கூறுகையில், பஞ்சாப் அணியில் லலித் மோடி பங்குதாரர் அல்ல. இந்த விஷயத்தில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இவை எல்லாமே அடிப்படை ஆதார மற்றவை. இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications