108 ஆம்புலன்ஸ் போல இலவச அமரர் ஊர்தி சேவை!
சென்னை: '108' அவசர ஆம்புலன்ஸ் சேவையைப் போல தொலைபேசி மூலம் செயல்படும் 'இலவச அமரர் ஊர்தி சேவையும்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் இறக்கும் நிலை ஏற்பட்டால் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தனியார் அமரர் ஊர்திகளிடம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அரசு- தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இப்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை' போல இலவச அமரர் ஊர்தி சேவையும் வேறொரு தொலைபேசி எண் மூலம் செயல்படுத்தப்படும்.
நடப்பு நிதியாண்டிலேயே இந்தத் திட்டம் அமலுக்கு வரும்.
'அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108' திட்டம் கடந்த 15.9.2008 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களால் பெரிதும் பாராட்டப்படும் இந்தத் திட்டத்தில் இப்போது 385 ஆம்புலன்ஸ்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை விரைவில் 445 ஆக விரைவில் அதிகரிக்கப்படும்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையால் 11.04.2010ம் தேதி வரை 3 லட்சத்து 90 ஆயிரத்து 961 பேர் பலனடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த 20,184 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் ஃபிஸியோதெரப்பிஸ்ட்டுகள்:
அதேபோல நடப்பாண்டில் 25 அரசு மருத்துவமனைகளில் ஃபிஸியோதெரப்பிஸ்ட்டுகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கான உபகரணங்கள் வழங்க ரூ.2.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காலாவதி மருந்து மற்றும் போலி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் வகையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை வலுப்படுத்த புதிதாக 75 மருந்து ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
யானைக்கால் பாதிப்பு: மாதந்தோறும் ரூ.400 உதவி:
யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.400 வழங்கப்படும்.
யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களால் கால், கை போன்ற உறுப்புகளை பயன்படுத்த முடியாது. இவர்களுக்கு மாத உதவித் தொகையாக இனி ரூ.400 வழங்கப்படும். இதனால் சுமார் 5,000 பேர் பலனடைவர் என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications