தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் திருவாரூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் மாயம்!
திருவாரூர்: திருவாரூர் கொரடாச்சேரி பேரூராட்சிக்கு நடந்த கவுன்சிலர் பதவி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் இருவரைக் காணவில்லை. அவர்களை திமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுபள்ளது.
கொரடாச்சேரியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கொரடாச்சேரி பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து கடந்த 19ம் தேதி பேரூராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன.
இன்று இந்தத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந் நிலையில் அதிமுக 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட காளிதாஸ் திடீரென இன்று திமுகவில் இணைந்துவிட்டார்.
அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மல்லிகா, கோவிந்தராஜ் ஆகியோரை காணவில்லை என்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இவர்களை திமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திடீரென இரு அதிமுக வேட்பாளர் மாயமானது திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications