விடைத்தாள் மாயம்-மறு தேர்வு எழுதிய 262 மாணவர்கள்
சென்னை: முசிறியில் பிளஸ்-2 இயற்பியல் தேர்வு எழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனதையடுத்து இன்று அவர்கள் மறு தேர்வு எழுதினர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி பிளஸ்-2 இயற்பியல் தேர்வுகள் நடந்தன. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். ஆனால், அவர்களது விடைத்தாள் கட்டு காணாமல் போய்விட்டது.
இதையடுத்து 262 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் ஏப்ரல் 22ம் தேதி அதே பள்ளியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று அதே மையத்தில் மறுதேர்வு நடந்தது.
முசிறி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுடன் (பதிவு எண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 தவிர) அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர), தண்டலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469968 முதல் 470052 வரை (470045 நீங்கலாக) இந்தத் தேர்வை எழுதினர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?:
இந் நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications