புளியங்குடியில் எலுமிச்சை விலை வீழ்ச்சி!
புளியங்குடி: புளியங்குடி எலுமிச்சை மார்கெட்டில் எலுமிச்சை பழங்களின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும், எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் மருத்துவ பயன்பாட்டிற்கும், சோப்புகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதால் எப்போதுமே தேவை அதிகமாக இருக்கும்.
இவற்றை விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்யமுடியாமல் இடைதரகர்கள் மூலமாக விற்பனை செய்கின்றனர். மேலும் தமிழகத்தில் எலுமிச்சை பழத்தி்ற்கு என்றே பிரத்யேகமான மார்க்கெட் புளியங்குடியில் மட்டுமே உள்ளது.
மற்ற பகுதிகளில் எடை போட்டு எலுமி்ச்சை பழங்கள் விற்பது வழக்கம். இங்கு மட்டும் எண்ணிக்கையின் அடிப்படையில் எலுமிச்சை பழங்கள் விற்கப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட சூறவாளிகாற்றில் இப்பகுதியில் ஏராளமான மரங்கள் பாதிப்படைந்தன. மேலும் போதிய பருவ மழை இல்லாததாலும், கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவி்த்து வருகின்றனர்.
இந்நிலையி்ல் புளியங்குடி மார்க்கெட்டில் எலுமி்ச்சை விலை திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 1000 பழங்கள் 2500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்வதால் திடீரென விலை வீழ்ச்சியடைந்தது. ஆயிரம் பழங்கள் 1500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமி்ச்சை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications