தமிழகத்துக்கு கர்நாடக நிறுவனம் 150 மெகாவாட் மின்சாரம்
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே மாதம் 31ம் தேதி வரை 300 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதின்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து தென் மண்டல மின் வினியோக மையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கர்நாடக நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலும் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்த நீதிபதிகள் பெஞ்ச் தமிழ்நாட்டுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 300 மெகா வாட் மின்சாரத்தில், 150 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக கர்நாடக மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு ஜெ.எஸ்.டபிள்யூ. மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை மே மாதம் 31ம் தேதி வரை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
கர்நாடகம், தமிழ்நாடு சார்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெறவும் ஒப்புக் கொண்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications