துபாயில் பெரம்பலூரைச் சேர்ந்தவர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் செல்வ முஹம்மது (54) என்ற தமிழர் வெள்ளிக்கிழமை மதியம் மாரடைப்பால் மரணமானார்.
துபாயில் கடந்த 30 ஆண்டுகளாக பணிசெய்து வந்தவர் செல்வ முஹம்மது. இவர் தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்தவர். ஆரபி வீட்டுவேலையில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் பணிசெய்துவந்தார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பிறகு வீட்டில் அமர்ந்திருக்கும்போது நெஞ்சுவலிப்பதைப்போல் உணர்ந்த இவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணமானார்.
இவரின் முதலாளி உடனே விரைந்து வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இவரது உடல் தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மறைந்த செல்வ முஹம்மதுக்கு மும்தாஜ் பேகம் என்ற மனைவியும் 5 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications