கடலோரப் பகுதிகளில் கன மழை – இடி தாக்கி 3 பேர் பலி
நெல்லை: கடலோர பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு 3 பேர் பலியானார்கள். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சநிலையை அடைந்துள்ளது. அதே சமயம் வடமாநிலங்களிலும், தென்மாநிலங்களான தமிழகம், கேரளாவிலும் ஆங்கங்கே கோடை வெயிலின் கொடூர தாக்கத்தை தணிக்கும் விதமாக இடியுடன் கூடிய பலத்த மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
நேற்று நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் வயலுககு பம்பு செட் மூலம் நீர் இறைத்து விட்டு வீடு திரும்பிய தெம்பை நாடார் என்பவரும், அதே பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த மகாலிங்கம் என்பவரும் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் பெரிங்கோம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். திடீரென பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் இடிதாக்கி உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ்குமார் என்ற வீரர் உடல் கருகி இறந்தார். மேலும் இவரோடு பயிற்சியில் இருந்த 13 பேர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உடல் கருகி கவலைக்கிடமான முறையில் கண்ணூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் கருகி இறந்த உ.பி வீரர் உடல் இன்று உ.பிக்கு செல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications