பவார், நிதீஷ் குமார், பிரகாஷ் காரத் போன்களை ஒட்டுக் கேட்ட மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Karat,Pawar,Nithish Kumar
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவார், சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகோயரின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டுள்ளதாக அவுட்லுக் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் போன் பேச்சும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

கடந்த 15 நாட்களில் பவாருக்கும், ஐபிஎல் தலைவர் மோடிக்கும் இடையிலான உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த உரையாடலின்போது பல்வேறு ஐபிஎல் அணிகளின் ஏல முறை குறித்து இருவரும் பேசிக் கொண்ட முக்கியத் தகவல்கள் அரசிடம் சிக்கியுள்ளதாம்.

கார்கில் போருக்குப் பின்னர் மத்திய அரசு தேசிய தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தை உருவாக்கியது. உளவுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலமாகத்தான் பவார் உள்ளிட்ட தலைவர்களின் உரையாடல்களை அரசு ஒட்டுக் கேட்டுள்ளதாம்.

இதை வடி முக்கியமாக கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக லோக்சபாவில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது பிரகாஷ் காரத் பேசிய பேச்சையும் ஒட்டுக் கேட்டுள்ளது அரசு. அரசுக்கு எதிராக மிகத் தீவிரமாக அப்போது செயல்பட்டு வந்தார் காரத் என்பது குறிப்பிடத்தக்து.

அதேபோல தனது கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் பேச்சை 2007ம் ஆண்டு ஒட்டுக் கேட்டுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.

நிதீஷ் குமாரின் பேச்சும் 2007ம் ஆண்டு அக்டோபரில் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரியிடம் கேட்டபோது நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். இதுகுறித்து அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்று மட்டும் மொட்டையாக கூறினார் அவர்.

ஏற்கனவே தரூரால் நாடாளுமன்றத்தை 2 நாட்களுக்கு முடக்கினர் எதிர்க்கட்சியினர். தற்போது ஐபிஎல் ஊழல் குறித்து நாடாளுமன்றத்தை முடக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் முக்கியத் தலைவர்களின், குறிப்பாக பவாரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால், நாடாளுமன்றம் வரலாறு காணாத அமளியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+