தலைமறைவாக இருந்த இராக் முன்னாள் துணை அதிபர் இப்ராகிம் கைது

தூக்கிலிட்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் உறவினரான இஸ்ஸத் இப்ராகிம், அவரது ஆட்சியில் நம்பர் டூ ஆக இருந்தவர். மேலும் சதாமின் பாத் கட்சியின் துணைத் தலைவராகவும், நாட்டின் புரட்சிகரப் படை கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.
சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் இவர் தலைமறைவாக இருந்தார். இவரை உயிரோடு அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு பல மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருந்தது அமெரிக்கா.
இந் நிலையில் இப்போது இவர் பிடிபட்டுள்ளார். இராக்கின் வட கிழக்கு மாகாணத்தின் தலைநகரான தியாலாவில் உள்ள ஹம்ரின் மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் பதுங்கியிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார்.
இவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதாம் மகளை பிடிக்க வாரண்ட்:
இந் நிலையில் அமெரிக்க கோரிக்கையை ஏற்று சதாம் ஹூசேனின் மூத்த மகள் ரகத் ஹூசேனை தேடப்படுவோர் பட்டியலில் இன்டர்போல் சேர்த்துள்ளது. இதையடுத்து இப்போது ஜோர்டானில் உள்ள அவர் விரைவில் நாடு கடத்தப்பட்டு இராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இராக் தீவிரவாதிகளுக்கு ரகத் ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்க கூட்டுப் படையினரும் இராக்கிய போலீசாரும் குற்றம் சாட்டியதையடுத்து இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜோர்டான் மன்னரின் ஆதரவுடன் சதாம் ஹூசேனின் குடுமபம் அங்கு அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications