வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு-நாளை போராட்ட அறிவிப்பு?
Subscribe to Oneindia Tamil

சித்திரா பெளர்ணமியன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை பாமக நடத்துகிறது. இந்த ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களை பங்கேற்க வைக்க பாமக கடந்த 2 மாதங்களாகவே ஏற்பாடுகளை செய்து வந்தது.
நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவிற்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு தலைமை தாங்குகிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்ட அறிவிப்பையும் ராமதாஸ் வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதனால் இந்த விழா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழாவையொட்டி மாமல்லபுரம் முழுவதும் பாமக வரவேற்பு வளைவுகள், தலைவர்களின் கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications