5 லட்சம் வங்கிப் பணியாளர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு

கிட்டத்தட்ட 5 லட்சம் வங்கி ஊழியர்கள் 17.5 சதவிகித சம்பள உயர்வைப் பெறவிருக்கிறனர். இதற்கான ஒன்பதாவது ஊதிய சீராய்வு ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கமும் அனைத்து வங்கிப் பணியாளர் யூனியன்களும் கையெழுத்திட்டன.
நவம்பர் 1, 2007 பின் தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு தரவிருப்பதால், கணிசமான தொகை ஒவ்வொரு ஊழியருக்கும் தரப்பட உள்ளது. இதனால் வங்கித் துறையில் கூடுதலாக ஆண்டுக்கு ரூ 5200 கோடி செலவாகும்.
இதில் அரசுத் துறை வங்கிகளுக்கு மட்டும் ரூ 4816 கோடி கூடுதல் செலவாகும். தனியார் துறைக்கு ரூ 400 கோடி.
அரசுத் துறை வங்கி ஊழியர்களுக்கு இப்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 27520 கோடி சம்பளத்துக்காக மட்டும் செலவாகிறது. இப்போதைய உயர்வையும் சேர்த்தால் ரூ 32 ஆயிரம் கோடிகளைத் தாண்டுகிறது.
இந்த சம்பள உயர்வு 26 அரசு வங்கிகள், 12 தனியார் வங்கிகள் மற்றும் 8 வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி, இனி ஆரம்ப நிலை அலுவலர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ 14500 லிருந்து 52000 வரை இருக்கும்.
கிளர்க் நிலை பணியாளர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ 6200 முதல் 23900 வரை இருக்கும். கீழ்நிலைப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ 5500 முதல் 13800 வரை இருக்கும்.
மேலும் ஓய்வு பெறும் ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேரும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோர் ஓய்வு பெறும்போது 50 சதவிகித பிஎப் தொகையை சரண்டர் செய்ய வேண்டும்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கு அனைத்து வங்கிப் பணியாளர் யூனியன்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications