சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி!
பெங்களூர்: தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயலலிதா, அவரது உயிர்த் தோழி சசிகலா, அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுதாகரன், தினகரன், இளவரசி ஆகியோர் மீது லண்டனில் ஹோட்டல் வாங்கியது மற்றும் வருமானத்தை மீறி சொத்துக்களை வாங்கிக் குவித்தது ஆகிய இரு வழக்குகள் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகி்ன்றன.
14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்குகள் முதலில் தமிழகத்திலும் பின்னர் ஜெயலலிதா கோரிக்கைப்படி கர்நாடகத்துக்கும் மாற்றப்பட்டன.
இதில் லண்டன் ஹோட்டல் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றுவிட்டது.
சொத்து குவிப்பு வழக்கு மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஜெயலலிதா மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை 1996-97ம் ஆண்டில் விசாரணை அதிகாரிகள் சட்டப்படி நடத்தவில்லை என்று புதிய காரணத்தைக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மீண்டும் தனி நீதிமன்றத்தில் கடந்த 17ம் தேதி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும், அரசு சார்பில் வழக்கறிஞர் ஆச்சார்யாவும் ஆஜராயினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஜெயலலிதா சொல்லும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மக்கள் வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது-ஜெ:
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கை மற்றும் மாநில திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு ஆகியவற்றின் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக ஏறிக் கொண்டே செல்கிறது.
விலைவாசி உயர வழி வகுக்கும் வகையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியது. உர விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன.
இவற்றையெல்லாம் கண்டித்து அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் சார்பில் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் நடத்திட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அறப் போராட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அரசு மிரட்டியது.பல இடங்களில் மூடியிருந்த கடைகளை திறக்குமாறு வியாபாரிகளை திமுகவினர் மிரட்டினர். சில இடங்களில் திமுகவினரே காவல் துறையின் உதவியோடு பூட்டிய கடைகளை திறந்தனர்.
இருப்பினும், திமுக அரசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் வியாபாரிகள் கடைகளை தாங்களாகவே அடைத்திருந்தனர்.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன.
தனியார் வாகனங்கள் இயங்கவில்லை.இந்த அறப் போராட்டம் வெற்றி அடைந்ததில் இருந்து, மத்திய அரசின் மீதும், மாநில திமுக அரசின் மீதும் மக்களுக்கு உள்ள வெறுப்புணர்வு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, சிரமத்தை பொருட்படுத்தாமல், இந்த அறப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications