அனைவருக்கும் கல்வி கணக்கெடுப்பு - பள்ளி செல்லா குழந்தைகள் 2500 பேர் கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தி பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள் சுமார் 2500 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை முறையான பள்ளிகளில் சேர்த்து கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளிக்கும் மத்திய அரசின் சட்டம் ஏப் 1ல் அமுலுக்கு வந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் 1 கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள். இதற்காக 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஏப் 5ல் கணக்கெடுப்பு பணி துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களையும் 4 மண்டலங்களாக பிரித்து தலா 80 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவிற்கு 2 பேர் வீதம் 40 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணி நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி தன்னார்வளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றுக்கு 5 பள்ளிகள் வீதம் அங்குள்ள தொடக்க கல்வி பதிவேட்டில் இடம் பெற்றுள்ள குழந்தைகளின் விவரப்பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்கலிலும் ஏறக்குறைய 2500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications