பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த சோரன்-காங் ஆதரவுடன் புது அரசு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரன் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டுவிட்டது.
பெட்ரோல், டீசல், விலை உயர்வை எதிர்த்து மக்களவையில் நேற்று பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சிபு சோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இது அவரது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆதரவுடன்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வராக உள்ளார். அவர் இன்னும் மக்களவை உறுப்பினராகவே உள்ளார். இன்னும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவி்ல்லை.
இந் நிலையில் அவர் திடீரென காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் பாஜக கடும் எரிச்சலடைந்தது.
காங்கிரஸ் மற்றும் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சோ ஆகிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க சிபு சோரன் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சோரனின் மகன் ஹேமந்துக்கு துணை முதல்வர் பதவியும் மராண்டிக்கு முதல்வர் பதவியும் அளிப்பது என்ற அடிப்படையில் அங்கு புதிய கூட்டணி உருவாகவுள்ளது.
இதையடுத்து சிபு சோரனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் பாஜகவை வெட்டி வட சிபு சோரன் முடிவு செய்துள்ளார். அதற்கு முன் அவருக்கு தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டால் தான் நமது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடியும் என ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் டெல்லி தலைவர்களிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து இன்று டெல்லியில் கூடிய பாஜக உயர் மட்டக் குழுவில் சிபு சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி தலைமையில் நடந்த பாஜக தலைவர்கள் கூட்டத்தில் சோரனுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சிபு சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
சோரன் செய்த துரோகத்தை பாஜக தீவிரமாக கருதுகிறது. இதனால்தான் இந்தமுடிவு எடுக்கப்பட்டது என்றார்
மேலும் சோரன் அரசில் இடம் பெற்றுள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் உடனடியாக பதவி விலகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சிபு சோரனின் கட்சிக்கு 18 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்களும், மராண்டி கட்சிக்கு 11 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 20 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பா ஓட்டு போட்டுட்டோம்-சிபு சோரன் கட்சி:
இந் நிலையில் மக்களவையில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறுதலாக நடந்த செயல் என சிபு சோரன் கட்சி விளக்கமளித்துள்ளது.
அரசுக்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்து, தவறுதலாக நடந்த செயல் என்று சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக தலைவர் நிதின் கட்கரியைச் சந்தித்து விளக்கமளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இது எப்டி இருக்கு...!
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications