சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய தொழிலாளி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்த உதவிய சரக்குத் தொழிலாளி கைது செயயப்பட்டார்.
அவரிடம் தங்கத்தைத் தந்து கடத்தச் சொன்ன விமானப் பயணி தப்பிவிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை வந்தது.
இந்த விமானம் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் குடியுரிமை பிரிவு கவுண்டர் அருகே வந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவரது பெயர் கணேசன் (38) என்றும் தனியார் விமான நிறுவனத்தில் சரக்கு ஏற்றும் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
அவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் 2.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 40 லட்சமாகும்.
அவரிடம் விசாரி்த்தபோது, சிங்கப்பூர் விமானத்தில் வந்த ஒரு பயணி விமானத்துக்குள் வைத்து இதை தன்னிடம் தந்ததாகவும், வெளியில் கொண்டு வந்து தந்தால் ரூ.20,000 தருவதாகக் கூறியதாகவும், அவருக்காக காத்திருந்தபோது பிடிபட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து தங்கம் கடத்த உதவிய குற்றத்துக்காக கணேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தங்கத்தை கொடுத்த பயணி தப்பிவிட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications