பூமிக்கு உயிரும் நீரும் வந்தது எப்படி?.. இந்த விண் கல் சொல்லலாம்!

சூரியனிலிருந்து 479 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் இந்த விண் கல்லை ஹவாய் தீவில் உள்ள இன்ப்ரா ரெட் டெலஸ்கோப்கள் மூலம் ஆராய்ந்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைட் பிஸிக்ஸ் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
24 தெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண் கல்லில் நீர் மட்டுமின்றி கார்பன் மூலக்கூறுகள் உள்ளிட்ட சில உயிர் சத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
150 கிமீ அகலம் கொண்ட இந்த விண் கல்லில் 3ல் ஒரு பகுதி பனிக் கட்டியாகவே உள்ளதாகத் தெரிகிறது.
சூரிய குடும்பத்துக்கு வெளியே (சரியாகச் சொன்னால் நெப்டியூன் கிரகத்தையும் தாண்டி) சுற்றும் எரி கற்களில் (comets) நீ்ர், பனிக் கட்டி இருப்பது வழக்கமானது தான். அவை சூயனுக்கு மிகத் தொலைவில் இருப்பதால் அதில் பனிக் கட்டிகள் இருப்பது வழக்கம்.
ஆனால், சூரிய குடும்பத்துக்குள் இரு கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த விண்கல்லின் உள்ளே நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளதாகவும், அதை மற்ற சிறிய கற்கள் மோதும்போது ஏற்பட்ட வெடிப்பில் நீர் வெளியே கசிந்துள்ளதாகவும் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு நீரும் உயிர்களும் வி்ண் கற்கள் மற்றும் எரி கற்கள் மூலம் தான் வந்திருக்க வேண்டும் என்ற தியரியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி உருவானபோது ஏற்பட்ட பயங்கரமான வெப்பத்தில் இங்கு நீரோ, உயிர்களோ தப்பியிருக்க வாய்ப்பில்லை. இதனால் நீரும் உயிரும் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு கணிப்பாகும்.
எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த 24 தெமிஸ் கூட ஒரு எரி கல்லாகத் தான் இருக்க வேண்டும் என்றும், அது சூரிய குடும்பத்துக்குள் பயனித்தபோது மார்ஸ் மற்றும் ஜூபிடர் கிரகங்களுக்கு இடையிலான வட்டப் பாதையில் சி்க்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இந்த விண் கல்லில் சூரிய ஒளி எப்படி எதிரொளிக்கிறது என்பதை இன்ப்ரா ரெட் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்தபோது நீர், கார்பன் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
சூரிய ஒளிபடும்போது இதிலுள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதாகவும், இருளில் நீர் மீண்டும் உறைந்து இந்த விண் கல்லிலேயே தேங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.
ஜப்பானிய விண்கலம்...
இதற்கிடையே 2005ம் ஆண்ட Itokawa விண் கல்லில் இறங்கி அதன் சாம்பிள்களை எடுத்துக் கொண்டு பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஜப்பானிய விண்கலமான ஹையாபூசா வரும் ஜூன் மாதத்தில் பூமியில் தரையிறங்கவுள்ளது. அதில் கிடைக்கும் சாம்பிள்கள் மூலம் பொதுவாக விண் கற்கள் குறித்து மேலும் பல விவரங்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications