சுவிஸ் வங்கியில் ஐபிஎல் பணம் குவிப்பு – அமலாக்கப் பிரிவு விசாரணை
மும்பை: ஐபிஎல் முறைகேடுகள் மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பகுதியை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போட்டுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலாக ஐபிஎல் மோசடிகள் உருமாறும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த அளவுக்கு ஐபிஎல் ஊழலின் அளவும், பரவலும் படு பயங்கரமாக இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் ஏலம் விடப்பட்டதிலும், போட்டிகளை டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டதிலும் நிதிமுறை கேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அணிகள் ஏலம், அதன் உரிமையாளர்களின் வருவாய் பற்றி வருமான வரித்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையிலேயே வெளிநாடுகளில் இருந்து பணம் கொண்டு வந்து ஹவாலா மோசடி செய்ததும், கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கி இருப்பதும் தெரிந்தது. இந்த பண பரிமாற்றம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது சுவிஸ் வங்கிகளிலும் பெருமளவில் பணத்தை போட்டு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். நிதி மோசடி பணத்தில் 20 கோடி ரூபாய் சுவிஸ் வங்கி ஒன்றில் போடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. நைஜீரியா, மொரிஷியஸ், ஹாங்காங், இங்கிலாந்து நாட்டு வங்கி கணக்கு பரிமாற்றங்கள் மூலமாகவும் நிதி மோசடி நடத்தப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். அமைப்பு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் இத்தகைய மோசடி நடந்திருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் விதிமுறைகளை மீறி ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்துள்ளது.
சுவிஸ் வங்கி இந்த பணம் பற்றிய முழு தகவல்களை தர மறுக்கிறது. இதனால் மோசடியில் ஈடுபட்டு பணம் குவித்தவர்களை கண்டுபிடிக்க அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications