யஷ்வந்த் சின்ஹாவை முதல்வராக்கி ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க பாஜக திட்டம்

காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வெட்டுத் தீர்மானத்தின்போது வாக்களித்து பாஜகவின் கடும் கோபத்தை சந்தித்தார் சிபு சோரன். ஆனால் திடீரென காங்கிரஸ் தூக்கிப் போட்டுவிடவே அதிர்ச்சி அடைந்த சோரன் பாஜகவிடம் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்.
நான் பதவியிலிருந்து விலகவும் தயார், நீங்களே ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள், ஆதரவைமட்டும்விலக்க வேண்டாம் என அவர் கூறி வருகிறார். மேலும் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனும், தனது தந்தை செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாஜகவின் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தைக் கொடுக்க விருந்த பாஜக தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் நாமே ஆட்சியமைக்கலாமே என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும். யஷ்வந்த்சின்ஹாவை முதல்வர் பதவியில் அமர்த்தி, ஹேமந்த் சோரனை துணை முதல்வராக்கவும் பாஜக திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
வாபஸ் முடிவு நிறுத்திவைப்பு
இதற்கிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு மன்னிப்பு கோரி சிபுசோரன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து இன்று பாஜக நாடாளுமன்றக் கட்சிகூடி ஆலோசித்தது.
இதில் அதவானி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சோரன் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை நிறுத்திவைப்பது என்றும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications