அஜ்மீர் குண்டுவெடிப்பு-2 'அபினவ் பாரத்' தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

Ajmer bomb blast
அஜ்மீர்: ஆஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஆஸ்எஸ்எஸ் மற்றும் பெண் தீவிரவாதி பிரஞ்யா தாகூருடன் தொடர்புடைய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்குள் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாயினர்.

இந்த சம்பவத்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த சிம்கார்டு மூலம், அபினவ் பாரத் சங்கடன்' என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேவேந்திர குப்தா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த குப்தா நோய்வாய்ப்பட்ட தன் தாயாரை பார்க்க புதன்கிழமை அஜ்மீருக்கு வந்தார். அவது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

அவரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இவரிடம் நடத்திய விசாரணையி்ன் அடிப்படையில் இந்த குண்டுவெடிப்பில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் பரோட் என்பவரும் நேற்றிரவு பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் சாஜாபூர் அருகே ஒரு கிராமத்தில் வைத்து இவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.

இந்த இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்துள்ளார்.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+