மே தினம் - விடுமுறை அளிக்காத 52 நிறுவனம் மீது நடவடிக்கை
நெல்லை : மே தினத்தையொட்டி விடுமுறை விடாமல் தொழிலாளர்களை வேலை பார்க்க வைத்த 52 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சுடலைராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு...
மதுரை இணை ஆணையர் ஜெயசிங்கன், நெல்லை மண்டல துணை ஆணையர் சுந்தரராஜன் ஆலோசனைபடி மே தினத்தன்று நெல்லை, பாளை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வு நடத்தினர்.
பொதுவாக மே தினத்தன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
மாறாக அன்று பணிபுரியும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அன்று பணிபுரிய விரும்பும் சிப்பந்திகளிடம் சட்டவிதிகளின்படி கையொப்பம் பெற்று ஒரு நகலை அறிவிப்பு பலகையிலும், மற்றொரு நகலை 24 மணி நேரத்திற்கு முன்பு தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மே 1ம் தேதி சிப்பந்திகளை பணியில் அமர்த்திய 30 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 18 உணவு நிறுவனங்கள், 4 பீடி, மற்றும் சுருட்டு தொழில் நிறுவனங்கள் ஆகிய 52 தொழில் நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்ட விதிகளின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications