திருமாவளவனை உடனடியாக் கைது செய்ய வேண்டும்- முக்குலத்தோர் பேரவை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி மன்னார்குடியில் அம்பேத்கர் அறிவாலயம் மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் விழா முடிந்ததும், பரவாகோட்டை கிராமத்துக்கு கொடியேற்று விழாவுக்கு சென்றபோது, இரவு 10.30 மணிக்கு, கொடியேற்றும் முன்பாகவே தாக்கப்பட்டார்.
மறைந்திருந்து கல்வீசி தாக்கியதில் திருமாவளவனின் கார் கண்ணாடி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் என்பவரின் கால் முறிந்தது. இதையடுத்து பல கார்களும் நிறுத்தப்பட்டது.
இதனால் 30ஆம் தேதி பேருந்து மறியல், பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
திருமாவளவன் கார் மீது கல் வீசியதாக பரவாக்கோட்டையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 11 பேரை கைது செய்ததை கண்டித்து முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தலைவர் செங்கூட்டுவன் வாண்டையார் தலைமையில் மன்னார்குடி நெடுவார்கோட்டையில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.
அங்கு டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் வந்த காவல்துறையினர், முன் அறிவிப்பு இல்லாமல் பேருந்து மறியல் செய்யக்கூடாது என்று தடுத்ததின்பேரில், முக்குலத்தோர் பாதுகாப்பு பேரûவை சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அதில், தலித் அல்லாதவர்களை திருமாவளவன் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் அல்லாதவர்கள் மீது தலித்துகள் கொடுக்கும் புகார்களை தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரமும் செய்யப்பட்டது. திருமாவளவன் கைது செய்யப்படாத பட்சத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலித் இல்லாத மக்களை இணைத்துக்கொண்டு சாலை மறியலில் செய்ய தயாராகுவோம் என்றும் பேரவை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications