3 மாதங்களில் சென்னையில் மினி பஸ்கள் ஓடும்- கே.என்.நேரு

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
சென்னையில் ஆட்டோக்களை அதிகரிப்பது போல ஷேர் ஆட்டோக்களை அதிகரிக்க முடியாது. அதனால் மாநகர பேருந்துகளின் வசூல் பாதிக்கப்படும். அதே சமயம் கனெக்டிங் சர்வீஸ் எனப்படும் இணைப்புச் சேவை என்ற பெயரில் குறுகிய தெருக்கள் உள்ள பகுதிகளில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக மினி பேருந்துகள் இன்னும் 3 மாதத்தில் இயக்கப்படும். இதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.
சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம், சிம்டிஏ நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளை கொண்டு உருவாக்கப்படும் இந்த புதிய அமைப்புக்கு சிஎம்டிஏ போல சட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு அளிக்க உள்ளது.
இந்த அமைப்பு உருவாக சில காலமாகும். இந்த பெருந்திட்டப் பணிகள் 88 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும்.
சென்னை மாநகர பகுதியில் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெளி வட்ட சாலை அமைக்கும் பணியும் செயல்படுத்தப்பட உள்ளது. இது தவிர ரூ.16, 285 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டமும் 45 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
மேலும், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 207 இடங்களில் சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன.
மாதந்தோறும் அதிகாரிகளை அழைத்து மாநகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார் நேரு.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications