ஜூன் 11ம் தேதி ராஜ்யஜசபா தேர்தல்- தமிழகத்தில் 6 இடங்களுக்குத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள் உள்பட மொத்தம் 57 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 11ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 14 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் உ.பியில் 11, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தலா 6 இடங்கள், பீகாரில் 5, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 4, மத்தியப் பிரதேசம், ஒரிசாவில் தலா 3, சட்டிஸ்கர், பஞ்சாப், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.

இறுதி நிலவரப்படி மே 25ம் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும். ஜூன் 1ம் மனு தாக்கல் செயச்ய கடைசிநாளாகும். ஜூன் 2ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன்4ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். போட்டி இருந்தால், ஜூன் 11ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது உறுப்பினர்களாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த டிடிவி தினகரன், மலைச்சாமி, அன்பழகன்,கோவிந்தராஜர, காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் நாச்சியப்பன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+