ஒகேனக்கல் விவகாரம்: தமிழக-கர்நாடகா தலைமைச் செயலாளர்கள் பேச்சு- எதியூரப்பா

இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்த அவர் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா,
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையும், தமிழகத்தில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்ட பின்னர் இரு மாநில உறவில் சுமூக நிலை ஏற்பட்டது.
தற்போது ஒகேனல்லல் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பிரச்சனைகளை தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முதற்கட்டமாக தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நான் எப்போதும் நட்புறவையே விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
கர்நாடகத்தில் சிவனசமுத்திரம் நீர் வீழ்ச்சியில் மின் உற்பத்தி திட்டத்தைத் துவக்க வேண்டும் என்று கர்நாடகம் தீர்மானித்துள்ளது.
ஆனால், இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நீண்ட காலமாக அத்திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அத்திட்டத்தை துவக்க இப்போது கர்நாடகம் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில்தான் ஒகேனக்கலில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது. இரு மாநிலங்களிடையே இப்போது உள்ள நல்லுறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே கர்நாடகத்தின் விருப்பமாகும்.
எனவே, இவ்விரு திட்டங்கள் தொடர்பாக முதல்கட்டமாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக் கூட்டம் முடிவடைந்ததும், தமிழக தலைமைச் செயலாளருடன் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.
பிரதமருடன் கர்நாடக எம்.பிக்கள் சந்திப்பு:
இந் நிலையில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக பாஜக எம்பிக்கள் அனந்தகுமார் தலைமையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது ஒகேனக்கலில் சர்ச்சைக்குரிய இடத்தில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்றார் எதியூரப்பா.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications