எம்.பிக்களுக்கு ரூ. 2 கோடி தொகுதி நிதி வழங்குவது செல்லும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தொகுதி வளர்ச்சி்க்காக ஒவ்வொரு எம்பிக்கும் ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படுவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு காண்ட்ராக்டர்களிடமிருந்து எம்பிக்கள் கமிஷன் வாங்கும் விஷயம் 2005ம் ஆண்டில் வெளியானது. இதையடுத்து கமிஷன் வாங்கியது உறுதி செய்யப்பட்ட எம்பிக்களின் பதவி பறி்க்கப்பட்டது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா குடும்பத்தினர் நடத்தும் ஒரு அறக்கட்டளைக்கும் நிதி ஒதுக்கப்பட்டதும் பெரிய விவகாரமானது.
இதையடுத்து இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதவியாயின. இந்த வழக்குகள் அனைத்தும் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
2006ம் ஆண்டில் இந்த வழக்குகளை விசாரி்த்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றியது.
இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீ்ர்ப்பளித்தது.
தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கும் திட்டம் செல்லும். இந்தத் திட்டடத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் அதன் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்யலாம்.
சில குளறுபடிகள் இருக்கின்ற காரணத்தால் எம்.பிக்களுக்கு தொகுதி நிதி வழங்கும் திட்டத்தையே முற்றிலும் ரத்து செய்வது சரியான முடிவாகாது. இந்த நிதியில் முறைகேடு செய்யும் எம்.பிக்கள் மீது நாடாமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தத் திட்டம் அரசியல் சாசனரீதியாக சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தின் கீழ் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை மட்டும் திட்டத்திற்கு எதிரானதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications